திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சௌராஷ்ட்ரா நடுநிலைப்பள்ளியில் அன்னை சமூக சேவை அமைப்பு மற்றும் நிலக்கோட்டை கணித மன்றம் சார்பில் கணித மேதை இராமானுஜன் பிறந்தநாள் விழா கணித மன்ற தலைவர் பிச்சை நாதன் தலைமையில் 2 நாட்கள் நடைபெற்றது. பள்ளி தாளாளர் சுதாகரன் முன்னிலை வகித்தார்.விழாவில் வத்தலக்குண்டு மாவட்டக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய மாணவ மாணவிகளுக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார், ஒன்றிய பெற்றோர் ஆசிரிய சங்கத தலைவர்
டாக்டர் செல்வராஜ், ஊக்குவிப்பு பயிற்றுனர் வீரா.பாலச்சந்திரன்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமூக அமைப்பின் தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். திட்ட இயக்குனர் நா. காசிமாயன் வரவேற்புரை நிகழ்த்தினார். வத்தலக்குண்டு கல்வி மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள்ளிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பெருந்திரளான தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கணித மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன.முசுவனூத்து அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் இராமானுஜம் பற்றிய வரலாற்று நாடகம் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் ஆரோக்கியசாமி நன்றி நவின்றார்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.