நிலக்கோட்டையில் மழை வேண்டி இந்து அன்னையர் முன்னணி சார்பாக 1008 மகாசக்தி கலச யாக ஊர்வலம் 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அகோபில நரசிங்க பெருமாள் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி நிலக்கோட்டை ஒன்றியம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி பதிகம் பாராயணம் செய்யும் 1008 மகாசக்தி கலச பூஜை விழா நடைபெற்றது. விழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக நிலக்கோட்டை, அணைப்பட்டி ரோடு, ஸ்ரீ கருப்பு சாமி கோவிலில் இருந்து தொடங்கி  14.08.2019 முன் தினம் மாலை 4:30 மணி அளவில் முளைப்பாரி மற்றும் 11 புண்ணிய தீர்த்த கலசங்களுடன்  சுந்தரராஜ கூளப்ப நாயக்கர் தலைமையிலும்,ராமானந்தா சுவாமிகள் முன்னிலையிலும் ஊர்வலம் நடைபெற்றது.  இந்த ஊர்வலம் நிலக்கோட்டை அகோபில நரசிங்க பெருமாள் கோவில் முன்பு சென்று அங்கு அய்யர் மலை சிவயோக சச்சிதானந்தம், சிவானந்தம் சுவாமிகள் முன்னிலையில் மகா வேள்வி யாகம் நடைபெற்றது.     இதனைத் தொடர்ந்து 2 வது நாள் நிகழ்ச்சியாக சுதந்திர தினத்தன்று ( 15.08.2019 ) நிலக்கோட்டை அணைப்பட்டி ரோடு கருப்பு சாமி கோவிலில் இருந்து மழை வேண்டி பதிகம் பாராயணம் செய்யும் 1008  மகாசக்தி கலச யாக பூஜைக்காக 1008 பேர் பெண்கள் ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலத்தை முன்னணி தமிழக மாநில தலைவர்  காடேஸ்வரா சி சுப்பிரமணியன்ஜி கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் நிலக்கோட்டை நாலு ரோடு, சங்கரன் சிலை, மெயின் பஜார், சௌராஷ்ட்ரா நடுநிலைப்பள்ளி, பெரிய காளியம்மன் கோவில்,மாரியம்மன் கோவில் உள்ளிட்ட வழியாக வந்து நிலக்கோட்டை நரசிம்ம பெருமாள் கோவில் சன்னதியை அடைந்தது.         இங்கு மழை வேண்டி  மகா யாகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிலப் கோட்டையைச் சுற்றியுள்ள சுமார் 20 ஆயிரம் மக்கள் யாகத்தில் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர். மேளதாளம், வானவேடிக்கை, வட்டார கிராமிய கலை குழு சார்பாக நடைபெற்றது.  திண்டுக்கல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய குமார், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமாரன், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன், சூர்யா ஆசிரியர் பயிற்சி நிறுவனர் மரகத அமுல்ராஜ், மாவட்டத் தலைவர் வேலுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாட்ராயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரதாப் , ஒன்றிய அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை  தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!