நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கண்மாய் நிரப்ப வேண்டும் என கோரி விவசாயிகள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சித்தர்கள் நத்தம் ஊராட்சியில் உள்ள விவசாயிகள் சங்கத் தலைவரும் மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளருமான முத்தையா தலைமையில் சுமார் 40 பேர்கள் ஒன்று திரண்டு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சிவஞானபுரம் கண்மாயிலிருந்து   சித்தர்கள் நத்தம் புதுக்குளம் கண்மாய்க்கு வரும் வாய்க்கால்களில் திடீரென தடுப்புச்சுவர் 3 அடி உயரம் உயர்வை கண்டித்தும் ,அதனை உடனே அகற்றிட கோரியும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.     அப்போது நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி விவசாயிகளிடம் உரிய இடத்தை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  ஏற்று உடனடியாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சிலர் சிவஞானபுரம் கண்மாயில் தண்ணீர் செல்ல இயலாத நிலையில் கட்டப்பட்ட கட்டிடத்தை உடனடியாக உரிய வழிமுறையில் அகற்றி புதுக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல உரிய வழிவகை செய்தனர்.  இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாலர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!