விளாம்பட்டி யில் கிராம சபை கூட்டத்தை நடத்த கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு விரைந்து சென்று அதிகாரி வாக்குறுதி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் லாரன்ஸ் முன்னிலை வைத்தார். மாவட்ட ஆட்சியர் (சத்துணவு நேர்முக உதவியாளர்) சதீஷ் பாபு நேரில் வந்து கிராம சபை கூட்டத்தை ஆய்வு செய்தார். இதேபோன்று பச்சமலையான் கோட்டை ஊராட்சி, புது காமன் பட்டியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்றது. சபைக் கூட்டத்தில் கிராமத்தில் மழை நீர் சேகரிப்புத் தொட்டி களும், அனைத்து குளங்களையும் தூர்வாரி மழை நீரை சேகரித்தல் குறித்து உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

         ஜம்பு துரை கோட்டை ஊராட்சியில் அரசு நடுநிலைப் பள்ளி முன்பு உள்ள வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கிராமப்பகுதியில் வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 100 நாட்கள் வேலை கிடைக்க வேண்டி அரசு வழிவகை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..   விளாம்பட்டி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் ஊராட்சி செயலாளர் திலகர் தலைமையில் கிராம சபை கூட்டம் தொடங்கிய போது அங்கு வந்த கிராம பொதுமக்கள் கிராம சபைகூட்டத்தை நடத்த கூடாது கடந்த 20 நாட்களாக தொடர்ந்து குடிதண்ணீர்  வழங்காத  கண்டித்தும், ஊராட்சி செயலாளர் பணியை முறைப்படுத்த கோரியும் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தனர்..     இதை அறிந்த நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி): செல்வராஜ் விரைந்து சென்று மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் அமர்ந்து கடந்த 20 நாட்களாக தண்ணீர் வழங்குவதற்கு, முறையாகச் ஊராட்சி செயலாளர் பணியாற்றுவதை நிலையை எடுத்துக் கூற இது அழகு மீது தக்க நடவடிக்கை எடுக்கவும், நாளை குடிநீர் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பொது மக்கள் அமைதியாக கலந்து கொண்டனர்.

       சித்தர்கள் நத்தம் ஊராட்சி, குண்டலபட்டி ஊராட்சி செயலாளர் விஜய கர்ண பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் முத்துப்பாண்டி முன்னிலை வைத்தார்.   கூட்டத்தில் பொதுமக்கள் சார்பாக சுதந்திர தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் 24 துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு மூன்று துறைகளில் மட்டுமே வந்துள்ளதாக ஊராட்சி செயலாளர் விஜய கண்ணன் பாண்டி தெரிவித்தார்.உடனடியாக வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கூட்டத்தில் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை என்றால் அந்த கூட்டத்தை புறக்கணிப்போம் என தெரிவித்தார்கள். இதன் காரணமாக சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

         எத்திலோடு ஊராட்சி அலுவலகத்தில் சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சின்னன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மழைநீர் மற்றும் குளங்கள் தூர்வாருதல், மரக்கன்று அதிகளவு நாடுவதால் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.      பிள்ளையார்நத்தம் ஊராட்சி அகம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் கூட்டம் ஊராட்சி செயலாளர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது.. கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் 100 நாள் மற்றும் குளங்களை தூர் வாருதல், 24 துறை அதிகாரிகளை கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

             பள்ளபட்டி ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்தில் சிப்காட் நிறுவனத்தில் ஊட்டியை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  தருவதில்லை, பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மட்டப்பாறை ஊராட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிக அளவு போர்வெல் மற்றும் ஆழ் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!