நிலக்கோட்டையில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் பொது மருத்துவமுகாம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் திமுக மணிகண்டன், நிலக்கோட்டை பேரூராட்சித் தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன், பேரூராட்சி துணை தலைவர் முருகேசன், துணை இயக்குனர் இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர். வரதராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் வரவேற்று பேசினார். முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை இசிசி பரிசோதனை ரத்தம் சிறுநீர் ரத்த அழுத்தம் பொதுமருத்துவம் தாய் சேய் நலம் கொரானா பற்றிய தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து மருந்து , மாத்திரைகள் உடனடியாக வழங்கப்பட்டது. அதேபோன்று பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக அரசின் சார்பாக மூக்கு கண்ணாடிகளும் பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், நிலக்கோட்டை சுற்றியுள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!