திண்டுக்கல் மாவட்டம் , சிறுமலை அடிவாரம் பகுதிகளான கொடைரோடு, அம்மையநாயக்கனூர், காந்திகிராமம், பெருமாள்கோவில்பட்டி காமலாபுரம் போன்ற 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலை அடிவார தோட்டப் பகுதியில் 2000 -க்கு மேற்பட்ட ஏக்கரில் திராட்சை விவசாயமானது பல வருடங்களாக செய்து வருகின்றனர் . இங்கு விளையும் கருப்பு திராட்சைக்கு தனி ஒரு மருத்துவ குணம் இருப்பதாக கருதப்பட்டு திராட்சையை பன்னீர் திராட்சை என அழைக்கின்றனர். இப்பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் செய்துவந்த திராட்சை தற்போது மழை இல்லாத காரணத்தால் சுருங்கி சுமார் இரண்டாயிரம் ஏக்கர் அளவுக்கு தற்போது திராட்சை சாகுபடி செய்து வருகின்றனர் .
இந்நிலையில் திராட்சை தற்போது நன்றாக விளைந்து அதை செடியிலிருந்து வெட்டும் தருவாயில் தற்போது தொடர்ந்து மழை பெய்ததால் திராட்சை அனைத்தும் செடியிலேயே அழுகி அப்படியே கீழே உதிர்ந்து கொட்டிவிட்டது, இதனால் விவசாயிகள் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். கடந்த சில மாதங்களாக பருவமழையில்லாமல் தண்ணீரை விலைக்கு வாங்கி இந்த திராட்சை செடிகளை பாதுகாத்து தற்போது திராட்சை மகசூழுக்கு வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்ததால் திராட்சை பழங்கள் அனைத்தும் அழுகி உதிர்ந்துவிட்டதால் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர் . இதன்காரணமாக வியாபாரிகளும் திராட்சையை வாங்குவதற்கு முன்வரவில்லை …
இதனால் விவசாயிகள் கூறும்போது கேன்சரை குணப்படுத்த கூடிய நாட்டு திராட்சை இப்பகுதியில் பயிரிடப்படுகிறது. இந்த திராட்சை மற்ற விவசாய பொருட்களை போல ஒரு வாரமோ ஒரு மாதமோ வைத்திருந்து விற்பனை செய்யக்கூடிய பொருளல்ல . உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய பொருள். இந்த திராட்சை பழத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு குளிர் பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அதேபோல் இதுபோன்ற காலகட்டங்களில் திராட்சையை செடியில் இருந்து எடுத்து திராட்சை கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது மழையின் காரணமாக அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட திராட்சை விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









