நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அளவிலான மிகவும் பழமை வாய்ந்த மருத்துவமனையாக இருக்கின்றது நிலக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை கடந்த சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நிலக்கோட்டை நிலக் கோட்டையை சுற்றியுள்ள கொக்கர்குளம், மீனாட்சிபுரம், குளத்துப்பட்டி, என். ஊத்துப்பட்டி, சிலுக்குவார்பட்டி, பள்ளபட்டி, கட்டக்கூதன்பட்டி,கொக்குபட்டி, கோட்டூர், மைக்கேல்பாளையம் மற்றும் நிலக்கோட்டையைச் சுற்றியுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பயனடைந்து வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக எலும்புமுறிவு சம்பந்தமான பெரிய பெரிய ஆஸ்பத்திரியில் செய்யக்கூடிய மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவத்தை கூட தற்போது பணிபுரியும் டாக்டர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை நிலையங்களிலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை மிகுந்த சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மொத்தம் 15 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய சூழ்நிலையில் தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் பல்வேறு வகையில்  நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். அதுவும் தினந்தோறும் காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான நோய்களுக்கு வெளி நோயாளிகளாக கிராமப்புறங்களிலிருந்து வரும் நோயாளிகளை சரியாக கவனிக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகிறார்கள் எனவே உடனடியாக டாக்டர் பற்றாக்குறையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இருக்கும் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!