நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகை.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே நடகோட்டை கிராமப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சூரியசக்தி மின் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டு வருகிறது . இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 மாதத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும்  நடைபெற்று வருகிறது. தனியார் நிர்வாகத்தினரும் நீதிமன்றம் உட்பட பல்வேறு அரசு துறைகளில் உரிய அனுமதி பெற்று காவல்துறையினரின் பாதுகாப்புடன் கடந்த சில தினங்களுக்கு முன் மீண்டும்  பணிகளை துவக்கினர்.இந்நிலையில் அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள், ஓடைகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் , பூமிதான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த சோலார் ஆனால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் அந்தப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கூறி ஊர் பொது மக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் சின்னம்மாயன் தலைமையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை அந்த கிராமத்தைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் தங்களின் ஆதார், குடும்பஅட்டை உட்பட அரசு ஆவணங்களை ஒப்படைக்க வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.அப்போது தாசில்தார் தனுஷ்கோடி அலுவலகத்தில் இல்லாததால் நேரில் சந்தித்து ஒப்படைக்கும்வரை போக மாட்டோம் என வெகுநேரம் அலுவலக வாயிலில் அமர்ந்து காத்திருந்தனர்.மேலும் வட்டாட்சியர் மாலை வரை வரகால தாமதம் ஆனதால் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் இன்று வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர். மேலும் நேற்று 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் கால்நடைகளுடன் வந்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!