நிலக்கோட்டையில் மக்களுக்கான சமரச தீர்வு சட்ட விழிப்புணர்வு பேரணி.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் சார்பாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி கலைநிலா தலைமையில் மக்கள் நீதிமன்றம் சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு பேரணி முகாம் நடைபெற்றது. பேரணியை நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் மும்தாஜ் தொடங்கி வைத்தார். இப்பேரணி நிலக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி சங்கரன் சிலை நால்ரோடு பேரூராட்சி அலுவலகம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு இலவசமாக மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு மையம் மூலமாக வழக்குகளை உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டது கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர். இப்பேரணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், வழக்கறிஞர்கள் பாண்டி, அண்ணலங்கோ, கௌரி நாத், கோகுல்நாத் மற்றும் வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாகிகள், நிலக்கோட்டை அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!