கொடைரோட்டில் அனைத்து ரயில்களும் நிற்க வேண்டும்
பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமையில் பேரூராட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் விமல் , பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு சொந்தமான அரண்மனை குலத்தின் எல்லையை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை,மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்குட்பட்ட கோடை ரோட்டை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இருப்பினும் ஏராளமான ரயில்கள் கொடைரோட்டில் நிற்பது இல்லை. எனவே அனைத்து ரயில்களும் நிற்க மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சரும் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றி அதன் நகலை அனுப்ப கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதேபோன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்தக் கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!