நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டி சேர்ந்த சரவணன்  நெசவுத் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில்  அமாவாசை என்பதால் அனைப்பட்டி வைகையாற்றில் முன்னோர்களுக்கு திதி செலுத்துவதற்காக குடும்பத்தோடு வந்திருந்தார்.அப்போது சரவணனின் குழந்தைகள் சந்தோஷ்குமார் ( 12) தினகரன் ( 7). இருவரும் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்..தினகரன் மட்டும் வந்துள்ளார்.ஆனால் சந்தோஷ் குமார் வரவில்லை. உடனே அங்கே இருந்த பகுதிகளில் தேடி பார்த்து கிடைக்காமல் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.உடனடியாக போக நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் ஈஸ்வரன் தலைமையில் ஆற்றுப்பகுதியில் தேடப்பட்டது ஒரு குழியில் பிணமாக சந்தோஷ்குமார் விழுந்து கிடந்தான்.இதைப்பார்த்த பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!