பள்ளப்பட்டி அருகே கூலித் தொழிலாளர்களுக்கு கூலி கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொறியாளர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள பெரிய சேரியை சேர்ந்த அருண் குமார் வயது 42 இவர் கட்டிடப் பணி செய்யும் பொறியாளர் ஆவார். இவர் பள்ளப்பட்டி அருகே சிப்காட் நிறுவனத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் கட்டிடம் கட்டும் கூலி ஒப்பந்தம் பேசி கூலி தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு லட்சத்தி 70 ஆயிரத்தை தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் ஜான் தினேஷ் ஆகிய 2 பேர்களும் ஒப்பந்தத்தின்படி பணத்தை கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதனைப் பெற்றுத்தரக் கோரி சிப்காட் நிறுவனம் அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்து தர்ணா போராட்டத்தில் அருண்குமார் ஈடுபட்டார். இதை அறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈடுபட்ட அருண்குமார் இடம் சமரசம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போராட்டத்தை போராட்டத்தில் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியிடம் அருண்குமார் கொடுத்த புகாரின் படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிப்காட் நிறுவனத்தில் தர்ணா போராட்டம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!