நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை பட்டா வேண்டி முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கோட்டை ,நேரு நகர் , சொக்கு பிள்ளைபட்டி ஆகிய கிராமத்தில் வசிக்கும் கிராம பொது பொதுமக்களுக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா வேண்டியும், நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதித் தமிழ் மக்கள் கட்சியும் , வளரும் தமிழகம் கட்சியும் இணைந்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக ஏற்கனவே தமிழக முதலமைச்சருக்கும்! மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், நிலக்கோட்டை தாசில்தார் மற்றும் போலீசாருக்கும் மனு கொடுத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை மக்களைத் திரட்டி ஆதித்தமிழர் மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராமன் தலைமையிலும், வளரும் தமிழகம் கட்சி நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் மலைச்சாமி முன்னிலையிலும் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் , வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் உரிய சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டு மனை மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டிய வந்துள்ள பொதுமக்களின் மனுக்களைப் பெற தாசில்தார் நேரில் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை சமாதானப்படுத்திய நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் பொதுமக்கள் தற்போது கொண்டுவந்துள்ள மனுக்களை மண்டலத் துணை தலைமையிடத்து துணை தாசில்தார் என்றும் வழங்கி விட்டுச் செல்லுங்கள் இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து போகுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதன் காரணமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பட விளக்கம்: நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு பட்டா வேண்டி கிராம மக்கள் முற்றுகையிட்ட போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!