கொரோனோ மூன்றாம் அலை விழிப்புணர்வு, முக கவசம், மற்றும் சானிடைசர் வழங்கும் விழா!

நிலக்கோட்டை ஒன்றிய பேரூர் திராவிட முன்னேற்றக் கழகம்,மற்றும் “விக்டரி” அறக்கட்டளை இணைந்து நடத்திய கோரோனோ மூன்றாம் அலை விழிப்புணர்வு, முக கவசம், மற்றும் சானிடைசர் வழங்கும் விழா! நிலக்கோட்டை நால்ரோடு அருகில்நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்  ம.மணிகண்டன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,

நிலக்கோட்டை வட்டாட்சியர் டி.தனுஷ் கோடி பொதுமக்களுக்கு முக கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி கவசத்தை வழங்கினார்.நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும், நிலக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர்  கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி முக கவசம் மற்றும் சானிடைசர் வழங்கினார்கள்.இவ்விழாவில் நிலக்கோட்டை பேரூர் கழகச் செயலாளர் ப.கதிரேசன் ,பேரூர் துணைச் செயலாளர்கள் ஜோசப் கோவில் பிள்ளை, முருகேசன், மணி ராஜா,ஒன்றிய பொருளாளர் காளிமுத்து,ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் காதர்முகைதீன்,கழக பொறுப்பாளர்கள் செந்தில்குமார்,பாஸ்கரன், சிவனேசன், பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் நியாஸ்,பேரூர் மாணவரணி துணை அமைப்பாளர் கார்த்திக் பாண்டியன்.மற்றும் பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்,விழாவின் சிறப்பு அழைப்பாளராக மூத்த பத்திரிகையாளர் ஜெ.அஸ்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.விக்டரி அறக்கட்டளை நிறுவனர் முஹமது மீரா நன்றியுரை ஆற்றினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!