நிலக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம், உருவபொம்மை எரிப்பு முயற்சி.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நடராஜர் கோயில் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக சட்டசபையில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவருமான ஈஸ்வரன் எம்எல்ஏ ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை பயன்படுத்துவது குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து நிலக்கோட்டை நகரப் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும், உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய அணி பிரிவு மாநில பொறுப்பாளர் அழகுமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துராமன் , ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்: நிலக்கோட்டை நடராஜர் கோயில் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தப்படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!