நிலக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாலிபர் 10 நாட்களாக காட்டுப் பகுதியில் பிணமாக தூக்கில் தொங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் -கரட்டுப்பட்டி செல்லும் சாலையில் காட்டுப் பகுதியில் சுமார் 30 வயதிலிருந்து 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். 10 நாட்களாகியும் இந்தப்பகுதியில் பொதுமக்கள் யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் இப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற ஒருவர் அழுகிய நிலையில் ஒரு வாலிபர் மரத்தில் தொங்குவதைப் பார்த்து மட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலர் சுகன்யாவுக்கு தகவல் கொடுத்தார். இதை அடுத்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இறந்த வாலிபர் யார் என்பது அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. இறந்த வாலிபர் வீட்டில் அவருடன் தகராறு செய்து மனம் வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை நண்பர்களோடு சேர்ந்து ஏதேனும் தகராறில் ஈடுபட்டு யாரேனும் அடித்து கொலை செய்து விட்டார்களா? என்ற கோணத்தில் விளாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த வாலிபர் ப்ளூ கலர் டீசர்ட், டவுசரும் அணிந்துள்ளார்.படவிளக்கம்: விளாம்பட்டி அருகே மரத்தில் பிணமாக தொங்கும் வாலிபரை படத்தில் காணலாம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!