திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள விளாம்பட்டி போலீஸார் சொர்க்கத்திற்கு உட்பட்ட எத்திலோடு ஊராட்சி, முத்தால புரத்தைச் சேர்ந்த அழகர்சாமி மனைவி முத்துப்பிள்ளை வயது 56. இவரும் இவரது மகன்கள் இருவரும் இந்த வீட்டில் தற்சமயம் குடியிருந்து வருகிறார்கள். நேற்று மாலை நேரத்தில்
திடீரென அதி வேகமான காற்றும், மழையும் பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே இருந்த மின் கம்பம் திடீரென சாய்ந்தது சாய்ந்தது மின்கம்பம் முத்துபிள்ளை வீட்டின் மேல் விழுந்தது ஓட்டு வீடு என்பதால் வீடும் நொறுங்கிப் போனது. இதை சற்றும் எதிர்பாராத கிராமத்தினர் சற்று அதிர்ச்சி அடைந்தனர் இருப்பினும் முத்துப்பிள்ளை வயதானவர் என்பதால் வீட்டிற்குள் இருக்கிறார்களா என அப்பகுதி பொதுமக்கள் ஓடோடி பார்த்தனர் ஆனால் அதிர்ஷ்டவசமாக முத்துப்பிள்ளை அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றதால் அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக முத்துப்பிள்ளை உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த எத்திலோடு கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன, போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார் பாண்டியராஜன் விரைந்து சென்று மின்கம்பத்தை மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் இணைந்து மின்கம்பத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.