நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் பத்திரப்பதிவு 

தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி  ஆலோசனையின் பெயரில் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு தளர்வு களுடன் கூடிய ஊரடங்கு இருப்பினும்  பத்திரப்பதிவுத்துறை அந்தந்த சார்பதிவாளர் உயர்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி நேற்று  உரிய ஒலிப்பெருக்கி மூலம் . தகவல் தெரிவித்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து  பத்திரம் பதிவு செய்ய  சமூக அரசு உத்தரவிட்டது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் நிலக்கோட்டை சார்பதிவாளர் குணசேகரன் தலைமையில் பத்திரம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது அப்போது ஒலிபெருக்கி மூலம் பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் மத்தியில் உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளவும் , உரிய முகக்கவசம் அணிந்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருமாறு அவ்வபோது பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!