திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சென்ராயன் நகரில் குடியிருப்பவர் அய்யனார் மனைவி ஜோதி வயது 50. இவர் வேடசந்தூர் தாலுகாவில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறை என்பதாலும் தனது உடல்நிலை குறைவு ஏற்பட்டதாலும்,
நிலக்கோட்டையில் உள்ள வீட்டை பூட்டி விட்டு தனது மகள் ரெசிகா உடன் தனது அம்மா மதுரையில் இருக்கக்கூடிய வீட்டிற்குச் சென்று அங்கு தங்கி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டார் . அதனைத் தொடர்ந்து நேற்று காலை சுமார் 10 மணியளவில் வீட்டிற்கு வந்து தனது வீட்டை பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் வீட்டை பரிசோதனை செய்தபோது வீட்டில் இருந்த 11 பவுன் தங்க செயின்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாகத் தெரிய வந்தது. கொண்டார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசனிடம் புகார் கொடுத்தார். இதன்பின்னர் திண்டுக்கலில் இருந்து கைரேகை நிபுணர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் மோப்ப நாய் ரூபி துப்பு பிடிக்க விடப்பட்டது. இந்த மோப்ப நாய் வீட்டிலிருந்து பஸ் நிலையம் அருகே வரை ஓடிச் சென்று பின்னர் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.