நிலக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றிய திறனாளிகள் 200 பேருக்கு அன்னதானம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள திரவியம் நகரில் தமியான்  தொழுநோய் தடுப்பு மருத்துவமனையும் மில்லியன் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளியும் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் மாற்றுத் திறனாளிகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த மாணவர்களுக்கு நிலக்கோட்டை தி. மு. க. கட்சியின் 8 வது வார்டு செயலாளர் விஜயன் தலைமையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க கட்சியின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 98 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், தமியான் தொழு நோய் தடுப்பு மருத்துவமனை நிர்வாகி சகோதரி ஆக்னேஸ் சேவியர், லில்லியன் மனவளர்ச்சி குன்றியோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி பொறுப்பாளர் சகோதரி  இருதய டாக்டர் இருதய மேரி மற்றும் பள்ளி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!