திண்டுக்கல் மாவட்ட கோவிட் அவசர அழைப்பு அறையில் உள்ள அவசர போன் நம்பருக்கு நிலக்கோட்டை சேர்ந்த பிச்சை மனைவி ரோகினி வயது 65 வாழ்வாதாரத்திற்கு வழியில்லை என்று வந்த அவசர அழைப்புக்கு உரிய உதவி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் துறை சார்பாக உத்தரவிடப்பட்டது.
நிலக்கோட்டை உட்கோட்ட போலீஸ் துணைக் சூப்பிரண்டு முருகன் உடனடியாக நேரில் நிலக்கோட்டை காமராஜர் நகரில் குடியிருக்கும் பிச்சை மற்றும் ரோகினி ஆகியோரின் இருவரையும் விசாரித்தபோது பிச்சை கொடைக்கானலில் வாட்ச்மேனாக வேலை பார்ப்பதாகவும் , தற்போது ஊரடங்கு என்பதால் அந்த வேலைக்கு போக முடியாத சூழ்நிலையில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் தெரிந்து திண்டுக்கல் மாவட்ட கோவிட் அவசர அறைக்கு போன் செய்தோம் என்று கூறினார்கள். உடனடியாக தனது சொந்த பணத்தை விரைந்து ரோகினிக்கு அத்தியாவசிய பொருட்களுடன் ரூ.2000/- கொடுத்து உதவினார்.. இதற்கு ரோகிணி குடும்பத்தார் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன்க்கு நன்றி தெரிவித்தார்கள். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.