நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு கல்லூரி மாணவி தர்ணாபோலீஸ் தாக்கியதாக குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேகொக்குபட்டியைச் சேர்ந்த கோபால் மகள் பாக்கியஷீலா வயது 19. இவர் திருச்சியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி. எஸ். சி படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் வாசுதேவா வயது 26 எம். சி. ஏ படித்த பட்டதாரி. இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். பாக்கியஷீலாவை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் ஆசை வார்த்தை கூறி பாக்கிய ஷீலாவை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக வாசுதேவா இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் 8.5.2021 வீட்டில் யாரும் இல்லாதபோது வாசுதேவனும், பாக்கிய ஷீலாவும் தனியாக இருந்துள்ளார்கள். இதை அறிந்த அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கையும் ,களவுமாகப் பிடித்து விசாரணை செய்தனர். இதன் பின்னர் வாசுதேவா தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாக்கிய ஷீலா புகாரில் தப்பியோடிய காதலனை கண்டுபிடித்து சேர்த்து வைக்கும்படி கூறி புகார் கொடுத்தார். இதனை விசாரித்த போலீஸ், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரியாக விசாரிக்காமல் பாக்கிய ஷீலாவை தாக்கியதாக கூறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பாக்கிய ஷீலா கூறியதாவது: நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தபோது என்னை போலீசாரும் அங்கு இருந்த சப்-இன்ஸ்பெக்டர் லத்தியால் தாக்கினார்கள். எனக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறி கண்ணீர் மல்க கதறியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் பாக்கிய ஷீலாவை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசப் படுத்தினார்கள். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படவிளக்கம்: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பாக்கி ஷீலாவை படத்தில் காணலாம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!