விளாம்பட்டி அருகே பெற்றோர்களை வெறுத்து மாயமான பள்ளி மாணவிக்கு நிதி .

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே தங்கையாபுரத்தை சேர்ந்த போஸ் என்பவர் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி என்ற பெண்மணி திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகளும் ,ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது. இதை பார்த்து வந்த இவரது மகள் வர்ஷிகா வயது 13. பெற்றோர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதை பார்த்து மனம் வெறுத்து இந்த வீட்டில் இருப்பதை விட செத்துவிடலாம் என்று தாயிடமும், தந்தையிடமும் ஏற்கனவே கூறி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் 100 நாள் வேலைக்கு மகேஸ்வரி சென்றபின்பு வீட்டில் இருந்து வர்ஷிகாவை மாயமானார். இதுகுறித்து மகேஸ்வரி விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணனிடம் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து மாயமான வர்ஷிகாவை தேடி வருகிறார். இந்நிலையில் வர்ஷிகா செம்பட்டியில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று அங்கு பாதுகாப்பாக தங்கியிருந்தார். இதனை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது சிறுமி வர்ஷிகா வுக்கு படிப்பதற்கு பள்ளிக்கு கட்டணம் ரூபாய் 4,500ம், ஆன்லைன் வகுப்புக்கு செல்போனும் தேவைப்பட்டது. என விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அய்யம்பாளையத்தில் சேர்ந்த தொழிலதிபர் கோபிநாத் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தகவல் தெரிவித்தார் உடனடியாக அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி பள்ளிக்கு தேவையான கட்டணமும் வர்ஷியாக்கு தேவையான செல்போனும் வாங்கி கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காணாமல் போன சிறுமி கிடைக்கப் பெற்றதை அறிந்த பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்து இச்சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.படவிளக்கம்: நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் மாயமான மாணவி வர்ஷியாவுக்கு பணம் மற்றும் செல்போன் வழங்கிய போது எடுத்த படம்

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!