கொடைரோடு அருகே கள்ள நோட்டு கொடுத்து பழங்கள் வாங்கிய 2 பெண்கள் கைது நிலக்கோட்டை சிறையில் அடைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள காமலாபுரம் பிரிவில் சந்தன மேரி வயது 40. இவர் பழக்கடை வைத்துள்ளார். இவரிடம் மொபட்டில் வந்த இரண்டு பெண்கள் 15 ஆயிரத்து 300 ரூபாய்க்கு பழங்களை வாங்கினார்கள். பின்னர் 15 ஆயிரத்து 300 ரூபாயை சந்தன மேரியிடம் கொடுத்தபோது பணத்தைப் பார்த்து சந்தேகமடைந்து இருவரையும் மற்றும் அவர்கள் ஓட்டிவந்த மொபைல்களும் பொதுமக்கள் உதவியோடு பிடித்துவந்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமியிடம் 2 பெண்களையும் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது திண்டுக்கல்லைச் சேர்ந்த கணேசன் மனைவி சக்தி சூர்யா வயது 33 , பழனியை சேர்ந்த ரத்தினம் வயது 30 என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் மும்தாஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் அதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களும் நிலக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். பெண்கள் கள்ள நோட்டை கொடுத்து பழங்கள் வாங்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!