திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக தேன்மொழி சேகர் அறிவிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக இரட்டை இலை சின்னத்திற்கு தனது ஆதரவாளர்கள் , கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளபட்டி, குல்லககுண்டு, ராமராஜபுரம், முத்துலிங்காபுரம், விளாம்பட்டி, மட்டப்பாறை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிரமாகச் சென்று வாக்காளர்களிடம் இருந்த இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். இந்த வாக்கு சேகரிப்பில் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர், மற்றும் அதிமுகவினர் பலர் கிராமங்களில் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.