திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி உள்ளது. சிலுக்குவார்பட்டி பஸ் நிலையத்திலிருந்து கொடைரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று நெடுஞ்சாலை கொடைரோடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய முறையில் நோட்டிஸ் கொடுத்து நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ததால் அகற்றிக் கொள்ள உத்தரவிட்டனர். இந்நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் விசாரணை செய்த நீதிபதி உரிய ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி நிலக்கோட்டை – கொடைரோடு சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கூறினார்கள். இதற்கு அதிகாரிகளை மிரட்டியும், அசிங்கமாக திட்டியதாகவும் கூறி நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.படவிளக்கம் : நிலக்கோட்டை சிலுக்குவார்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்து வேலி போட்டு உள்ளதை படத்தில் காணலாம்
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.