நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ். தேன்மொழிசேகர் தீவிர வாக்கு சேகரிப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள கீழஅச்சனம்பட்டி , மேலஅச்சனம் பட்டி, எம். குரும்பபட்டி , கோம்பை பட்டி, செக்காபட்டி, கண்ணா பட்டி, விருவீடு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி பிரச்சாரமாக நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ் . தேன்மொழிசேகர் தனது ஆதரவாளர்களுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். எஸ். தேன்மொழி சேகர் பிரச்சாரத்தில் பேசியதாவது: நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கிராமங்கள்தோறும் கடந்த சில ஆண்டுகளாக மக்களின் கோரிக்கையை ஏற்று நாடகமேடை, மற்றும் அடிப்படை வசதிகளை மக்களின் கோரிக்கையின் படி செய்து வந்துள்ளோம். அதே போன்று மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் மாதம்தோறும் ரூபாய் ஆயிரத்தி ஐநூறு கிடைக்கவும் ஆறு சிலிண்டர் கிடைக்கவும் இன்னும் எண்ணற்ற நலத் திட்டங்கள் மக்களை வந்தடைய அதிமுகவிற்கு ஆதரவளித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன், ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ஜெயபாண்டி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டைசெய்தியாளர். ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!