திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விநாயகன் பட்டியை சேர்ந்த இருளாண்டி மகன் மனோகரன் வயது 32. இவருக்கு நாகேஸ்வரி வயது 30 என்ற மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து இவர்களுக்கு சங்கீதா வயது 9, நிஷாந்த் வயது 7 என்ற என்ற இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட தகராறில் திடீரென அதே ஊரைச் சேர்ந்த ராமன் மகள் ராமேஸ்வரியை இரண்டாவதாக கடந்த 6 மாதத்திற்கு
முன்பு திருமணம் செய்து விலிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தோட்ட குடியிருப்பில் குடித்தனம் செய்து வந்தனர். இந்நிலையில் ராமேஸ்வரிக்கு மனோகரனுக்கு அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தோட்ட குடியிருப்பில் உள்ள வீட்டை ராமேஸ்வரி பெயருக்கு எழுதி தருவதாக பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இவருக்கு மனோகரன் எதிர்ப்பு தெரிவித்து தனது பெயரில் வீட்டை எழுதி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது . இதில் இருவருக்கும் தகராறு முற்றவே கடந்த இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார் மனோகரன். இதன் பின்னர் நேற்று காலை பூவெடுத்து கொண்டிருந்த ராமேஸ்வரியிடம் தகராறு செய்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்தம் பீரிட்டு சம்பவ இடத்திலேயே ராமேஸ்வரி பரிதாபமாக செத்தார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் தேவதாசனுக்கு கொடுத்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ராமேஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் மனோகரன் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்து விட்டு நேராக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You must be logged in to post a comment.