நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் வழக்கறிஞர் முருகவேல் ராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களாக நிலக்கோட்டை தொகுதியில் உள்ள திமுக கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு சேர்த்து வருகிறார். இந்நிலையில் நிலக்கோட்டை வாரச்சந்தை பகுதியில் உள்ள திமுக நகரத் துணைச் செயலாளர் முருகேசன் அலுவலகத்திற்கு ஆதரவு கேட்டு மக்கள் விடுதலை கட்சி வேட்பாளர் முருகவேல் ராஜன் வந்தபோது அங்கு தமிழக வாழ்வுரிமை கட்சி பொறுப்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக் கூறி ஆதரவளித்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில்தமிழக வாழ்வுரிமைக் கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்டதலைவர் குழந்தை, கிழக்கு மாவட்டசெயலாளர் ரூபன் சுந்தர்,கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் கணேசன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பரத் , நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் மாதேஷ் , நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் கஸ்பார், வத்தலக்குண்டு ஒன்றிய துணைச் செயலாளர் ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

You must be logged in to post a comment.