திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள கே. குரும்பபட்டியை சேர்ந்த சென்றாயன் வயது 40. இவரது மனைவி வனிதா. இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரேமா என்ற 14 வயது பெண் குழந்தையும், ஜீவிதா வயது 9 என்ற பெண் குழந்தையும், தனிஸ்குமார் வயது 5 ஆண் குழந்தையும் உள்ளது. சென்ராயன் தற்போது நிலக்கோட்டை பூ
மார்க்கெட்டில் உள்ள பிக்கப் மினி வேனில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் 9.3.2021 இரவு தூங்க சென்றவர் நேற்று 10.03.2021 காலை சுமார் 5 மணி அளவில் வீட்டில் பேன் விசிறியில் சேலையை போட்டுக் தூக்கிட்டு இறந்து போனார். இதைப் பார்த்த அவரது மனைவி வனிதா அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு அழைத்து தூக்கில் தொங்கிய உடலை இறக்கி கீழே போட்டனர். இதைத்தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகதேவிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக தேவி தலைமையில் நிலக் கோட்டை போலீசார் விரைந்து சென்று சென்று சென்றாயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது போலீசார் விசாரித்தபோது ஆங்காங்கே வீடுகளைச் சுற்றி சாக்கடைகளில் ரத்தக் கரைகளும் , ரத்தமும் கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சென்ட்ராயன் இறப்பில் மர்மம் இருப்பதாக அறிந்து சென்றாயனை யாரும் கொலை செய்து விட்டு தூக்கில் தொங்கியது போன்று நாடகமாடி போட்டு விட்டுச் சென்றார்களா? இல்லை உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் சென்றானே தற்கொலை செய்வதற்காக தானே உடலில் ஆயுதங்களைக் கொண்டு கிழித்து கொண்டாரா ? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் போலீசார் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையிலும்,சம்பவம் நடந்த இடங்களிலும் கொலையா? தற்கொலையா ?என தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் இக்கிராமத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.