நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். தேன்மொழி .

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளராக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், திண்டுக்கல் அ தி .மு .க .கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான எஸ் . தேன்மொழி சேகர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் வீ. எஸ். எஸ். சேகர் ஆவார். இவருக்கு நிலக்கோட்டை நால்ரோடு அருகே இவரது வீடு உள்ளது. இவரது கணவர் சேகர் அ.தி.மு.க. வில் பல ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக இருந்து பின்னர் உயர்வு பெற்று மன்னவாரதி கிளைச் செயலாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து பின்னர் நிலக்கோட்டை நகரச் செயலாளராக அதிமுக வேட்பாளர் எஸ். தேன்மொழி சேகர் கணவர் சேகர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் தற்போது கடந்த 2019 நடந்த நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது வரை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மகளும், சேகர் என்ற மகனும் உள்ளார்கள். இருவரும் டாக்டருக்கு படித்து பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.படவிளக்கம் : நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகரை படத்தில் காணலாம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!