சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து ஒட்டப்படும் போஸ்டரால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முன்னாள் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான அதிமுக நிர்வாகி பி.ஆர்.ராஜேந்திரன், நிலக்கோட்டை நகர இளைஞர் அணி பாசறை பொருளாளர் அழகு முருகன், அவர்கள் ஏற்கனவே அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா சின்னம்மா அவர்களை வருக வருக என வரவேற்று ஆதரவளிக்கும் போஸ்டர் அடித்து அங்கங்கே ஒட்டி இருந்தனர். இந்நிலையில் எத்திலோடு ஊராட்சி மன்ற அ.தி.மு.க செயலாளராக பணியாற்றியும், ஒன்றிய பொறுப்பு, மாவட்ட பொறுப்புகளிலும் .ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அ.தி.மு.க நீண்ட காலமாக தற்போது வரை பணிபுரிந்து வந்த குருவைய்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சசிகலாவிற்கு ஆதரவாக நேற்று போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்கள். இதனால் நிலக்கோட்டை ஒன்றியத்தில் அதிமுகவுக்கு இடையே மிகப் பெரிய அளவில் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. படவிளக்கம் நிலக்கோட்டை பகுதியில் குருவையா மற்றும் அவரது ஆதரவாளர் அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் சின்னம்மா வருக வருக என்று வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளதை படத்தில் காணலாம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!