நிலக்கோட்டை பேரூராட்சி வாரச்சந்தை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று வரி வசூல் அறிவிப்பு பலகை.

 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் சற்று கூடுதலாக காய்கறி மற்றும் பல்வேறு பொருட்கள் மூட்டைக்கு பேரூராட்சி நிர்வாகம் அறிவித்ததை விட வரி வசூல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு நிலக்கோட்டை பேரூராட்சி வாரச்சந்தை சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சிக்கந்தர் அலி தலைமையில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையிலும், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையிலும் நிலக்கோட்டை வாரச்சந்தை முன்பு  நுழைவாயிலில் உடனடியாக வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அரசிதழில் ஏலம் விடப்பட்ட காய்கறிகள் மூட்டைக்கு மற்றும் பல்வேறு மூட்டைகளுக்கும் பேரூராட்சி நிர்வாகத்தால் நிர்ணயம்  செய்யப்பட்ட தொகையை அறிவிப்பு பலகை மூலம் வைத்தனர். இதனை பார்த்த வாரச்சந்தை சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இதுகுறித்து நிலக்கோட்டை பேரூராட்சி வாரச்சந்தை சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சிக்கந்தர் அலி, சங்கச் செயலாளர் பரணி ஆகியோர்கள் கூறியதாவது: மாவட்ட கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் உரிய அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை விடுத்தோம் அதனைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!