திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒரு தனியார் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்பவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ஹேமவர்ஷினி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவியாக சேர்ந்தார். இதை அறிந்த நிலக்கோட்டை நிலக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி தொகுதி பொறுப்பாளர் கோவிந்தராஜ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் வீட்டிற்கு சென்று பாராட்டி ஊக்கப் பரிசு வழங்கினார். அப்போது உடன் மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் பரணிதரன் , விவசாய அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் , தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கருணாநிதி, வத்தலகுண்டு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் உட்பட ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.