தற்போது தமிழகத்தின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் வருகிற 12 .12 .2020 ஆம் தேதி தனது பிறந்தநாள் அன்று அரசியல் கட்சி உறுதியாக அறிவிப்பதாக அறிவிப்பு நேற்று வெளியிட்டார். இதனை அறிந்த ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பட்டி ரகு தலைமையிலும், நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் காளிதாஸ் முன்னிலையிலும் அரசியல் கட்சி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப் இருப்பதை வரவேற்று நிலக்கோட்டை நால்ரோட்டில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திரன், சின்னராசு , கருப்பையா, சடையன், ராஜ்குமார், சேகர், லட்சுமணன், செல்வராஜ், ராஜாமணி , கலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.