நிலக்கோட்டை அணைப்பட்டி சாலைகள் அமைக்கப்படும் பாலம் உறுதியாக கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நகர் முக்கிய பகுதியான நிலக்கோட்டை நாலு ரோட்டில் இருந்து பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சாலை அகலப்படுத்தும் பணி சுமார் 5 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்களில் செல்வதற்குரிய முக்கிய சாலை ஆகும். இந்தச் சாலையில் அடைபட்டிருக்கும் காமராஜர் நகர் அருகே உள்ள சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் தற்போது பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பாலத்திற்கு போடப்படும் கம்பிகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதிக அளவு கனரக வாகனங்கள் செல்லும்போது பழுதடைய வாய்ப்புள்ளது வெகு சீக்கிரமாகவே தரம் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே உறுதியாக தரமான இன்னும் பெரிய கம்பியாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!