நிலக்கோட்டை அருகே முயலை வேட்டையாடிய 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள போடியகவுண்டன்பட்டி கிராமத்தின் வடபகுதியிலுள்ள ஓடைபகுதியில் சுருக்கு கம்பி கண்ணி வலைகளை பயன்படுத்தி முயல்களை வேட்டையாட முயற்சிப்பதாக வத்தலக்குண்டு வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கே சென்ற வனவர் அய்யனார் செல்வம், வனக்காப்பாளர்கள் முத்துகுமாரன், பீட்டர் ராஜா, கோவிந்தராஜ் ஆகியோர் அப்பகுதியில் பதுங்கி முதலை வேட்டையாடும் நபர்களை கண்காணித்து வந்தனர். அப்போது அப்பகுதியில் கீழத்தெப்பத்துபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கமலை வயது 40, அழகர் வயது 38 மற்றும் நடகோட்டை கிராமத்தை சேர்ந்த பரமசிவன் வயது 37 ஆகியோரை கைது செய்தனர், பின்னர் வனச்சரக சட்டத்தின்படி தலா 15 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பபட்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!