நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளருக்கு கொரானா எதிரொலியாக அலுவலகத்திற்கு பூட்டு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை திட்ட ஊர் நல அலுவலராகப் பணியாற்றி வருபவர் பாக்கியலட்சுமி  59. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து வரும் நபர்களை தங்க வைக்கக்கூடிய மையத்திற்கு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 8 நாட்களாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பணிக்கு வரவில்லை. கடந்த 8 நாட்களாக வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சேர்க்கப்பட்டு காய்ச்சல் தொடர்ந்து இருந்ததை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரானா ரத்தப் பரிசோதனை செய்தபோது தோற்று உறுதி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை உடனடியாக கிருமிநாசினி தெளித்து கழுவப்பட்டு மற்றும் அலுவலகத்திற்கு தற்காலிகமாக பூட்டு போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவ் அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் உரிய ரத்தப்பரிசோதனை பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் பெரும் பரபரப்பு, மற்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!