நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாலைய கவுண்டன்பட்டி ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித் தொழிலாளிகள் ஆகவே உள்ளார்கள். இந்நிலையில் மாலைய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் வேலைக்கு அமர்த்துவது வழக்கம். அப்படியிருந்தும் நேற்று மாலைய கவுண்டன்பட்டி கிராம மக்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்க வேண்டும் இந்நிலையில் கணிப்பொறியில் கோளாறு ஏற்பட்டு உள்ளது அதனால் வேலை வழங்க முடியாது என ஊராட்சி செயலாளர் மற்றும் மக்கள் நலப்பணியாளர் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாலைய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு மாலை கவுண்ட ன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். .
மாலையகவுண்டன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அப்போது ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது . தகவல் அறிந்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால முத்தைய்யா தலைமையில் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையும் ஏற்காமல் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதம் மற்றும் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செல்வராஜ் வட்டார ஆணையாளர் லாரன்ஸ் ஆகியோர் நேரில் வந்து பொதுமக்களிடம் உடனடியாக வேலை வழங்குவதற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 2 மணிநேரம் நீடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.