நிலக்கோட்டை அருகே உள்ள துள்ளுப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் வினிதா 14. இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில்
சும்மா இருக்கும்போது வீட்டு வேலைகளை செய்ய சொல்லி அவரது தாயார் உமா தனது மகள் வினிதாவை சொல்லியுள்ளார். இருப்பினும் வீட்டு வேலைகளைச் செய்யாமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார். இதற்கு தாயார் உமா சத்தம் போடவே வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்த போது கடந்த 16ந் தேதி இரவு நேரத்தில் வினிதா வீட்டை விட்டு கோவத்தில் கிளம்பி விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அக்கம்பக்கத்தில் தேடியும் வினிதா கிடைக்காததால் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் இடம் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இரவு நேரத்தில் பள்ளி மாணவி மாயமான சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது


You must be logged in to post a comment.