நிலக்கோட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி பலி

நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊரைச் சேர்ந்த ரத்தினவேல்  50. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரும் இவரது மகன் சிவ மாரிமுத்து  12. இரண்டு பேர்களும் அதிகாலை 5 மணிக்கு தனது அய்யம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் திரவியம் நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ரத்தினவேல் மற்றும் சிவமாரிமுத்து ஆகிய இருவரும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு ரத்தினவேல் மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது நிலக்கோட்டை ஒட்டிய பகுதியிலேயே பரிதாபமாக உயிர் பிரிந்தது.  நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு வைக்கப்படடுள்ளர். உடன்வந்த சிவமாரிமுத்து 7 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!