பள்ளப்பட்டியில் இளம்பெண் மர்மச்சாவு. நிலக்கோட்டையில் மருத்துவமனை முற்றுகையிட்டதால் பரபரப்பு.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, பள்ளபட்டி சேர்ந்த நிவாஸ் மனைவி காயத்ரி வயது 20. இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இவர் பள்ளபட்டி பகுதியில் கூலிவேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் நல்லா சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். திடீரென நேற்று மாலை 3 மணி அளவில் காயத்ரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையை தூக்குப்போட்டுக்கொண்டார். அப் போது அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையை பள்ளப்பட்டியைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு கூச்சலிட்டனர். இதனை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசி உடனடியாக காயத்ரியின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்குள் காயத்ரி இழந்ததால் இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காயத்ரிக்கும் , நிவாஸ்க்கும் இதுவரை குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு காயத்ரி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு விதமாக இழந்தாரா ? என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதேசமயம் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனை முன்பு சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு முற்றுகையிட்ட போது எந்தவிதமான சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை இதுபோன்ற நிலையை போலீசார் மிகக் கவனமாக சமூக இடைவெளி யோடு போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவார்கள் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!