காலி பாட்டிலில் உள்ள சில சொட்டுத் தண்ணீரை பரிதாபமாக குடிக்கும் குரங்குகள்

-கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு  அனைத்து வகையான மத வழிபாட்டு தலங்களும் இழுத்து மூடப்பட்டுள்ளது .கோவில்கள் அடைக்கப்பட்டு பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர தடை செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அணைப்பட்டி ஆஞ்சநேயர் திருக்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் ஆடு மாடுகள் உள்ளன இந்த குரங்குகள் ஆடு மாடு ஆகியவை ஆஞ்சநேயர் திருக்கோவில் இங்கு வரும் பக்தர்கள் கொண்டுவரும் உணவுகள் மற்றும் பக்தர்கள் படையிலிடும் உணவுகளை  உண்டு வாழ்ந்து வந்தன மேலும்  கோவிலில் உள்ள ஆடு மாடுகள் ஒப்பந்த அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வருகிறது மேலும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் அடைக்கப்பட்டு உள்ளதாலும் பக்தர்கள் வருகை இல்லாததாலும் பக்தர்களின் உணவுகளை நம்பியே வாழ்ந்து வந்த இங்கு உள்ள 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் சரியான உணவுகள் தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறது, மேலும் தற்பொழுது கடுமையான அக்னி வெயில் வாட்டி வரும் நிலையில் தண்ணீர் தாகத்தால் தண்ணீர் கிடைக்காமல்   குரங்குகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறது இதனால் இந்த கோவிலில் பகுதியில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இக்குரங்களின்க உயிரை காப்பாற்ற அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து  அவற்றிற்கு உணவு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!