கொடைரோடு அருகே சட்டவிரோத சீட்டாட்ட கிளப்பில் பயங்கரம்…

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே தேசிய நான்கு வழிச்சாலையில் ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த சீட்டாட்ட கிளப்பில் நேற்று இரவு பணத் தகராறில் நடந்த மோதலில் கிளப்பின் உரிமையாளர் ராம்குமார் மற்றும் அருண்குமார் இருவரும் செம்பகராஜா என்பவரை பட்டா கத்தியால் தலை, மார்பு, வயிறு என 10 -த்திற்கு மேற்பட்ட இடங்களில் குத்தியதாக கூறப்படுகிறது, இதனால் படுகாயம் அடைந்த செம்பகராஜா ரத்தவெள்ளத்தில் கிளப்பிலிருந்து தப்பித்து சாலையில் வந்து விழுந்து புரண்டு உள்ளார் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆம்புலன்சை அழைத்து திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் ரத்தம் அதிகம் வெளியேறியதால் உடனடியான மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உயிருக்கு போராடிய நிலையில் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் உடனடியாக அறுவைச் சிகிச்சைகள் மூலம் செம்பகராஜாவை காப்பாற்ற அரசு மருத்துவர்கள் போராடி வருவதாக கூறப்படுகிறது இச்சம்பவத்தை அடுத்து சீட்டாட்ட கிளப்பின் உரிமையாளர்களான ராம்குமார் மற்றும் அருண்குமாரை கைது செய்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்…

மேலும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாடேங்கும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் மத்திய மாநில அரசுகளின் உத்தரவுப்படி தனித்திரு விழித்திரு வீட்டில் இரு என வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டில் இருந்த நிலையில் தேசிய நான்கு வழிச்சாலையில் டோல்கேட் அருகே சட்டவிரோதமாக தினமும் இரவு பகலாக சீட்டாட்ட கிளப் நடைபெற்றதும் அதில் கொலை நடைபெறும் அளவிற்கு மோதல் ஏற்பட்டதும் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!