திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வீலி நாயக்கன்பட்டி, முசுவனூத்து ஆகிய ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள், மின் மோட்டார் இயக்குபவர்கள் , தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பணியாளர்களாக பணி புரியும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரெஜினா நாயகம் அரிசி மற்றும் காய்கறிகள் ,பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி அதனை இலவசமாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் தண்டபாணி, முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம் ராமநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வீருசின்னுமுருகன் , ஜெயபிரகாஷ் ஊராட்சி செயலாளர்கள் செல்வம், முகமது அத்திப் அதிமுக பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம, ராஜா


You must be logged in to post a comment.