நிலக்கோட்டை பேரூராட்சி சுகாதாரப் துப்புரவு பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி சார்பாக பேரூராட்சியில் பணியாற்றும் சுகாதாரம் துப்புறவு பணியாளர்களுக்கு அரசின் உத்தரவுப்படி பேரூராட்சிகளில் குப்பை மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் துப்புறவு பணியாளர்களுக்கு கொரானா வைரஸ் நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கையாக அரசின் சார்பாக முன்னெச்சரிக்கையாக கிருமிநாசினி, மற்றும் சோப்பு, தடுப்பு மருந்தாக கபசுர குடிநீர் ஆகியவைகளை நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமைதாங்கி வழங்கினார். நிலக்கோட்டை அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் ஹசீனா, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணி , உதவி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன் , பணி மேற்பார்வையாளர் ஆனந்தன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கல்யாணி, மஞ்சுளா, இளநிலை உதவியாளர் ஜியாகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!