நிலக்கோட்டையில் 3 மளிகைக்கடை  கடைகளுக்கு சீல் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியில் உள்ள நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது ஊரடங்கு சட்டத்தில் உள்ள சமூக இடைவெளி கடைபிடிக்காத நிலக்கோட்டை அணைப்பட்டி ரோட்டிலுள்ள ஒரு எலக்ட்ரிக் பொருட்கள் வைக்கக்கூடிய ஒரு கடையையும், வத்தலகுண்டு சாலையிலுள்ள ஒரு மளிகை கடையும், மதுரை சாலையில் உள்ள ஒரு மளிகை கடையையும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு பூட்டப்பட்டது.    அப்போது உடன் நிலக்கோட்டை பேரூராட்சி சுகதார ஆய்வாளர் செந்தில்குமார் ,போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி உள்பட பலர் இருந்தனர். மளிகைக் கடை மற்றும் எலெக்ட்ரிக் கடை பூட்டப்பட்ட சம்பவம் நிலக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!