நாடு முழுக்க கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது. இருப்பினும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கிராம மக்களுக்கு தேவையான தண்ணீரை வைகையாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றின் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கடுமையான வெயிலும் அதேசமயம் ஆறு வறண்டு கிடப்பதால் நீர் வழங்குவது ஊராட்சி நிர்வாகத்திற்கு மிகுந்த அளவில் சிரமத்தை ஏற்படுத்தி
உள்ளது. இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை வைகை ஆற்றுப் படுகையை ஒட்டி உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டம் குல்லிச்செட்டிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் . வைகை பாலன் தலைமையில் ஊராட்சிமன்ற ஒருங்கிணைப்பு அவசரக் கூட்டம் நடைபெற்றது. பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் முனி ராஜா முன்னிலை வகித்தார்.முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றுப்பகுதியில் ஊராட்சிமன்ற கூட்டமைப்பு சார்பாக நடந்த கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடியாக தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இன்றைக்கு ஊரடங்கு சூழ்நிலை இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்தவர்கள் கூட உள்ளூர் வாசியாக தற்போது வந்து அத்தனை கிராமங்களிலும் கூடுதலாக மக்கள் வாழ்வாதாரத்திற்கு குடி புகுந்துள்ளனர். இதன் காரணமாக தற்போது குடிதண்ணீர் அதிகமாக தேவை உள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்வது மிகக்கடுமையான போராட்டமாக இருக்கிறது.
எனவே இதை கருத்தில் கொண்டு ஊராட்சிமன்ற தலைவர்கள் வைகை ஆற்றுப்படுகை காய்ந்து கிடப்பதை சுட்டிக்காட்டினார்கள். மேலும் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலின் கிழக்குப் பக்கத்தில் கட்டப்பட்ட தடுப்பணையை உயர்த்தி கட்டி தண்ணீரை திறக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகேந்திரன்,முத்துலட்சுமிமுத்தையா, தீபா, ராஜலட்சுமி, அன்பழகன், பாப்பாத்தி, கிழவன் ராஜா, பழனியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









