திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள மாலையகவுண்டன் பட்டி ஊராட்சி பகுதியில் தூய்மை பணியாளராக மணிகண்டன் 40 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் 20.03.2020 மாலை சுமார் 5 மணி அளவில்
மாலைய கவுண்டன்பட்டியில் ஊராட்சியில் உள்ள முருக தூரன்பட்டியில் தமிழக அரசின் அவசர பிரகடன கொரோனா வைரஸ் தடுப்பு சுகாதார செயல்பாட்டின் அடிப்படையில் மருந்து தெளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மாலையகவுண்டன் பட்டியைச் சேர்ந்த அருளானந்து சேசுராஜ் என்பவர் கடுமையான வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமாக பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து உடனடியாக அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் புகார் கொடுத்துள்ளார். அங்கு புகார் எடுப்பதற்கு அலைக்கழிக்கப்பட்ட கூறி நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரை விசாரித்த போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யாவிற்கு உத்தரவிட்டார்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா


You must be logged in to post a comment.