திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ,முருகத்துரான்பட்டி அருகே உள்ள தெப்பன்குளம் கண்மாயில் தமிழக அரசின் சார்பில் குடிமராமத்து பணி செய்ய தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டதில் ரூபாய் 65 லட்சம் ஒதுக்கீடு செய்து பணியை தொடங்க உத்தரவிட்டது.இப்பணியை செய்வதற்காக இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் தலைமையில ஒரு சங்கம் ஏற்படுத்தி அதன்பேரில் பணி செய்ய வேண்டுமென நிபந்தனையுடன் பணியைச் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நிலக்கோட்டை அருகே கட்டக்கூத்தன்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவரும் ஒரு சங்கத்தின் தலைவராகவும், முருகதூரான்பட்டியை சேர்ந்த ஜான் இன்னாசி என்பவர் ஒரு சங்கத்தின் தலைவராகவும் பதிவு செய்தனர். இதில் போட்டி ஏற்படவே 2 சங்கங்களுக்கு இடையே சமாதான கூட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் 8 மாதம் முன்பு திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் இரண்டு சங்கங்களின் ஒப்புதலோடு குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் குலுக்கல் முறையில் தலைவராக ஜான் இன்னாசி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து அரசின் குடிமராமத்து பணி நடைபெற்றது. இந்நிலையில் இதனை ஏற்க மறுத்த கட்டகூத்தன்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சுரேஷ்குமார் கடந்த 12.08.2019 தேதி குல்லலக்குண்டு -ஊராட்சி பகுதியில் கிராமத்தில் உள்ள இ-சேவை மையத்தில் விவசாய சங்கத்திற்கு தேர்தல் நடத்த உத்தரவிட்டது. இந்த விவசாய சங்கத் தேர்தலில் ஜான்இன்னாசி 121 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் சுமார் ஒரு 10 நாட்கள் பணி நடைபெற்று சங்கத்திற்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதன் காரணமாக பணி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி பணி நிறுத்தப் பட்ட காரணத்தால் கண்மாய் தூர்வாரும் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செயல்படுத்தப்படாமல் உள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள். இந்த பணியை தொடங்க வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று சந்தித்து இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். எனவே இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளார்கள். சங்க நிர்வாகிகள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து பணி தொடங்கப்படுமா? எனவும் விவசாயிகள் கேள்வி எழுப்பினார்கள்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









